உக்ரைனுக்கு உதவிய பாகிஸ்தான் தொழிலதிபர்!

0
740

பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபரான முகமது சஹூர் (Mohammad Zahoor), பிரிட்டனில் தொழிலதிபராக இருக்கிறார்.

பாகிஸ்தான் வம்சாவளி நபரான இவர் உக்ரைனில் வசித்து வந்தவர். அங்கு அவர் உக்ரேனிய செய்தித்தாளான ‘கீவ் போஸ்ட்’ இன் முன்னாள் உரிமையாளராக இருந்தார்.

Pakistani billionaire Mohammad Zahoor buys fighter jets for Ukraine: reports

உக்ரைன் போரில் சிக்கிக்கொண்ட பலரை பத்திரமாக வெளியேற்ற உதவியவர். உக்ரைன் பாடகியான கமாலியாவின் கணவர்.

இப்படிப் பல்வேறு விதங்களில் உக்ரைனுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்கும் முகமது சஹூர்(Mohammad Zahoor), சமீபத்தில் தனது நண்பர்களின் ஒத்துழைப்புடன் அந்நாட்டுக்கு இரண்டு போர் விமானங்கள் வாங்கி கொடுத்துள்ளார். அவருடைய மனைவியும் உக்ரைன் பாடகியான கமாலியா இதனை ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

அவரது மனைவி கமாலியா சஹூர் ‘மார்னிங் வித் உக்ரைன்’ எனும் நிகழ்ச்சியில் பேசும்போது, “இந்த தகவலை வெளியிடுவதற்கு என் கணவர் எனக்கு அனுமதி வழங்கியிருக்கிறார்.

பொதுவாகவே அவரும் அவரது நண்பர்களும் தங்கள் செயல்பாடுகளை வெளியில் தெரிவிப்பதில்லை. அவர்கள் இரண்டு போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்கியிருக்கிறார்கள்” என்று கூறினார்.

உக்ரைன் போரில் சிக்கித்தவித்த பலர், வெளிநாடுகளில் அடைக்கலம் புகுவதற்கு முகமது சஹூர் பெரிய அளவில் உதவியதாக சர்வதேச செய்தி வெளியிட்டிருக்கிறது.

பல்வேறு தரப்பினரிடமிருந்து நிதி திரட்டி, பிரிட்டனுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் பலரை அவர் அனுப்பி வைத்திருக்கிறார். ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்குத் துணை நிற்க உலக மக்களிடம் ஆதரவு திரட்டுவதிலும் ஈடுபட்டிருக்கிறார்.