நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ராவும் அவரது கணவரும் குற்றப் புலனாய்வுத் துறையில்..!

0
253

நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் அவரது கணவர் காஞ்சன ஜயரத்ன ஆகியோரிடம் குற்றப் புலனாய்வுத் துறையினர் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.  

கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடலில்  நடத்தப்பட்ட அமைதி வழியிலான போராட்டம் வன்முறையாக மாறிய சம்பவம் தொடர்பில் அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகின்றது.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க, சமூக செயற்பாட்டாளர் டான் பிரியசாத், மொரட்டுவை நகர மேயர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.