காற்று மாசுபாடு காரணமாக 2.3 மில்லியன் மக்களை பறிகொடுத்த இந்தியா

0
254

இந்தியாவில் மாசுபாடு காரணமாக 2019ல் மட்டும் 2.3 மில்லியன் மக்கள் மரணமடைந்துள்ளதாக Lancet ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் காற்று மாசுபாடு காரணமாக 1.6 மில்லியன் இந்தியர்கள் மரணமடைந்துள்ளனர். மேலும், தண்ணீர் மாசுபாடு காரணமாக 2019ல் 500,000 இந்தியர்கள் மரணமடைந்துள்னர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக அளவில் மாசுபாடு காரணமாக 9 மில்லியன் மக்கள் 2019ல் மரணமடைந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தமட்டில் காற்று மாசுபாடு காரணமாக ஆண்டுதோறும் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மரணமடைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலக அளவில் காற்று மாசுபாடு காரணமாக 6.7 மில்லியன் மக்கள் 2019ல் மரணமடைந்துள்ளனர். அதேவேளை தண்ணீர் மாசுபாடு காரணமாக 1.4 மில்லியன் மக்களும் இறந்துள்ளனர்.

மாசுபாடு தொடர்பான இறப்புகளில் 90% க்கும் அதிகமானவை குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நிகழ்ந்தன, இந்தியா 2.36 மில்லியனுடன் முதலிடத்திலும், சீனா 2.1 மில்லியன் இறப்புகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.