சதொசாவுக்கு முன்னால் குவியும் பொதுமக்கள்!

0
271

குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்ள தற்போது சதொச கிளைகளுக்கு முன்னால் பெருமளவான பொதுமக்கள் வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.  

சதொச கிளையில் பொன்னி சம்பா கிலோ ஒன்று ரூ.175 ஆகவும், சிவப்பு சீனி ஒரு கிலோ ரூ.170 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒவ்வொரு நுகர்வோருக்கும் 05 கிலோ அரிசி, 1 கிலோ சிவப்பு பருப்பு மற்றும் 1 கிலோ சிவப்பு சீனி  ஆகியன வழங்கப்படுகின்றது. 

சந்தையில் உணவுப் பொருட்களின் சில்லறை விலை உயர்வால் ஹட்டன் சதொச கிளையில் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பெருமளவான மக்கள் வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.