தேசபந்து மீதான தாக்குதல் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு!

0
307

சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் இன்று நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளையில் அவர்களை பிணையில் விடுவிக்க இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மே 9 ஆம் திகதி காலி முகத்திடலில் நடத்தப்பட்ட கட்சி சார்பற்ற போராட்டத்தின் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றுள்ளது.

அதன்படி சில நாட்களுக்கு முன்னர் கொழும்பு – பேரவாவிக்கு அருகில் பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.