போராட்டத்தில் இறங்கிய கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள்!

0
292

கொழும்பில் தாமரைத்தடாகம் முன்பாக தற்போது பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை ஆரம்பித்துள்ளனர்.

இவேளை குறித்த பேரணியானது பொல்துவ சந்தியிலுள்ள நாடாளுமன்ற நுழைவுப் பகுதிக்கு வரலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் அங்கு வீதித் தடைகளும் பெருமளவு குவிக்கப்பட்டுள்ளதுடன், தண்ணீர் தாரை பிரயோக வண்டிகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, அரச தலைவர் மாளிகை பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்கலைக்கழக மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்ட பேரணியானது எங்கு செல்லவுள்ளது என்பது தொடர்பான தகவல்கள் தெரியாத இந்த சூழ்நிலையிலேயே கொழும்பின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.