மிரிஹானவில் பேருந்தை எரித்த சந்தேக நபர் சிக்கினர்!

0
327

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் (Gotabaya Rajapaksa) இல்லத்திற்கு செல்லும் பகுதியில் கடந்த ஒருமாதத்திற்கு முன்பாக இடம்பெற்ற அரச எதிர்ப்பு போராட்டத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் பேருந்து உட்பட சில வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

இந்த சம்பவம் நுகேகொடை மிரிஹான பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்த நிலையில் பேருந்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.