இன்றைய ராசிபலன் (18 மே 2022)

0
820

மேஷம்

மேஷ ராசிக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். உங்கள் திறமையால் மக்களை கவர்வீர்கள். நீங்கள் புத்திசாலித்தனமாக வேலை செய்தால், கூடுதல் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. சமூகப் பணிகளில் பங்கேற்று மற்றவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி அடைவீர்கள். மேலும், இது உங்கள் சமூக வட்டத்தை அதிகரிக்கும்.

​ரிஷபம்

இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அனைத்து விஷயங்களிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம். அமைதி காக்கவும். நீதிமன்ற வழக்கு விவகாரங்களில் சாதகமாக அமையும்.

தொழில் ரீதியாக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். முன்னேற்றம் உண்டாகும். வருவாய் பெரிதாக இல்லாவிட்டாலும், நிறைவாக இருக்கும். புதிய விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். பொறுமையோடு எதையும் செய்வது நல்லது.

​மிதுனம்

புதிய தொழில் முயற்சிகள் புதிய ஒப்பந்தங்கள் போன்றவற்றை நாளை தள்ளி வைப்பது நல்லது. சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சற்று காலதாமதம் ஆனாலும் வெற்றிகரமாக முடியும். பெண்களுக்கு சிறப்பான நாள் ஆகும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். பத்திரிக்கைத்துறை விஷுவல் மீடியா போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.

​கடகம்

எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியடையும். வேலை தேடுபவர்களுக்கும் வெளிநாட்டு பிரயாணம் பற்றி திட்டமிட்டு கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும் நாள் ஆகும்.

எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் மருத்துவத்துறை உணவு தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு இன்றைய நாளில் சிறப்பானதொரு உயர்வை காண்பார்கள். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை.

​சிம்மம்

கோவில் செல்லுதல் தெய்வப் பணிகள் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். தனவரவு உண்டு. கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும் உடல் நலம் நன்றாக இருந்து வரும். வாகன வகையில் அனுகூலம் உண்டு. பத்திரிக்கை துறை எழுத்துத் துறை மற்றும் கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு தங்களுடைய காரியங்கள் சற்று கால தாமதம் ஆக வாய்ப்பு உள்ளது.

​கன்னி

வணிகவியல் இயந்திரவியல் தொழில் போன்றவற்றில் உள்ளவர்களுக்கு சற்று கவனம் கூடுதலாக தேவை. விநாயகப் பெருமானை வழிபடவும். கடன் பிரச்சினைகள் சற்றே மனதில் கவலையை ஏற்படுத்தினாலும் அவற்றை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு.

துலாம்

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். சுபகாரியப் பேச்சுக்கள் வெற்றியடையும். ரியல் எஸ்டேட் கட்டிட தொழில் வாகன தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு சற்று கூடுதலான வேலை வாங்கக் கூடிய நாள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் முன்னேற்றம் காண்பார்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நல்லதொரு நாளாகும். சிறிய அளவில் பற்றாக்குறை இருந்தாலும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள்.

விருச்சிகம்

நேயர்களுக்கு செய் தொழிலில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உண்டு. வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும்.

அரசுத்துறை காரியங்களில் சற்று கால தாமதம் ஆகலாம். சொத்து விற்பது மற்றும் வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஆதாயம் கிடைக்கும். இடம் மாறுவது சொத்து வாங்குவது போன்ற சிந்தனைகளில் ஈடுபடுவீர்கள். கல்வியில் சற்று கவனம் தேவை.

தனுசு

சொத்து சம்பந்தப்பட்ட செயல்களும் சிந்தனைகளும் ஆதாயம் தருவதாக அமையும். உடல்நலன் நன்றாக இருந்து வரும். ஒரு சிலருக்கு கழுத்து மற்றும் தோள்பட்டை செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் வந்து நீங்கும்.

நாள் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய நாளாக அமையும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டு. சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். சொத்து தொடர்பான சிந்தனைகளும் செயல்பாடுகளும் நன்மையில் முடியும்.­

மகரம்

சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். மாணவர்களின் கல்வி மேம்படும். உறவினர்கள் வருகை அல்லது நண்பர்களை சந்திப்பது போன்ற மனதுக்கு இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். ஆயில் அண்ட் கேஸ் வங்கித்துறை மருத்துவத்துறை ஆன்மீகம் போன்றவற்றில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல நிகழ்வுகள் நடக்கும்.

​கும்பம்

குடும்பத்தில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பேச்சில் கவனம் தேவை. குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் கல்வியில் முன்னேற்றம் உண்டு. புதிய கல்லூரி சேர்க்கைகள் விரும்பியவாறு கிடைக்க ஏதுவான நாளாக இன்றைய நாள் அமைகிறது. மருந்து மருத்துவம் ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நாளின் பிற்பகுதி நன்றாக இருக்கும்.

மீனம்

சுபச் செலவுகள் நாளின் பிற்பகுதியில் தேடிவரும். சுப காரியத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். சுய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு ஒருசிலருக்கு திடீர் பிரயாணங்கள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது மிக நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. மொழிப்பாடம் மற்றும் அறிவியல் போன்ற பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் உள்ள பெரியோர்களுடன் சற்று கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் நிதானத்தை கடைப்பிடிப்பது சாலச் சிறந்தது.