முதல் கட்ட நிவாரணப்பொருள் இலங்கைக்கு – கொடியசைத்து அனுப்பி வைத்தார் ஸ்டாலின்

0
599

இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. இதனால் பொதுமக்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதனிடையே, இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுத்து உதவுவதற்கு முன்வந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 80 கோடி மதிப்புள்ள 40 தொன் அரிசி, ரூ. 28 கோடி மதிப்புள்ள 137 வகை மருந்துகள், ரூ. 15 கோடி மதிப்புள்ள 500 தொன் பால் பவுடர் ஆகியவை வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்நிலையில், சென்னை துறைமுகத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து கப்பலில் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார்.

முதற்கட்டமாக ரூ.8.84 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இருந்து ரூ.123 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளன. அதன் பிறகு மீண்டும் 22-ம் திகதி 2-வது கட்டமாக இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.