ஈரானிய கால்பந்தாட்ட அணியினர் கனடாவிற்கு வர எதிர்ப்பு!

0
196

ஈரானிய கால்பந்தாட்ட அணியினர் கனடாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வது தொடர்பில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

கனேடிய கால்பந்தாட்ட நிறுவனம் நல்லெண்ண அடிப்படையில் ஈரான் கால்பந்தாட்ட அணிக்கு அழைப்பு விடுத்திருந்தது.

ஜோன் ஹெர்மன்ட் தலைமையிலான கனேடிய கால்பந்தாட்ட அணி உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கு தகுதி பெற்றுக்கொண்டுள்ள நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வான்கூவாரில் எதிர்வரும் மாதம் ஈரான் அணியுடன் கனேடிய அணி நட்பு ரீதியான கால்பந்தாட்டப் போட்டியொன்றில் பங்கேற்ற திட்டமிட்டுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டில் உக்ரைன் விமானமொன்றை ஈரான் படையினர் சுட்டு வீழ்த்தியிருந்தனர்.

இந்த சம்பவத்தில் 176 பேர் கொல்லப்பட்டதுடன் இதில் 50 பேர் கனேடிய பிரஜைகள் என்பதுடன் மேலும் 30 பேர் கனேடிய நிரந்தர வதிவிடவுரிமை உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான ஓர் பின்னணியில் ஈரான் அணியுடன் போட்டி நட்பு ரீதியான போட்டி நடாத்துவதற்கு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

ஈரானிய அணிக்கு அழைப்பு விடுக்க எடுத்த தீர்மான்னம் பொருத்தமானது என கருதவில்லை என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவும் தெரிவித்துள்ளார்.