ஸ்ரீலங்கன் விமான சேவை தனியார் மயமாக்கப்படுமா?

0
862

நாட்டின் 2020/2021 ஆண்டு காலப்பகுதியில் 45 பில்லியன் இழப்புகளை இலங்கை விமான நிறுவனம் சந்தித்துள்ள நிலையில் இந்த நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கு தாம் முன்மொழிவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்தது,

“பாரிய நட்டத்தைச் சந்தித்து வரும் ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயமாக்குவதற்கு நான் மேலும் முன்மொழிகிறேன்.

2020-2021 ஆண்டுக்கான இழப்பு மட்டும் SLR 45 பில்லியன் ஆகும். மார்ச் 31, 2021 இல், மொத்த இழப்பு 372 பில்லியனாக இருந்துள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தனியார் மயமாக்கினால், இந்த இழப்பை தாங்கிக் கொண்டுதான் ஆகவேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த இழப்பு இதுவரை விமானத்தில் ஏறாத இந்த நாட்டின் ஏழை மக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.