கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு எரிபொருள் ஏற்றுமதி செய்ய முயற்சி!

0
708

 கனடாவிலிருந்து எரிபொருட்களை அமெரிக்காவிற் ஏற்றுமதி செய்யும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அல்பர்ட்டா மாகாண முதல்வர் ஜேசன் கென்னி, வொஷிங்டனுக்கு இரண்டு நாள் அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின் போது எரிபொருள் ஏற்றுமதி குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளார்.

அமெரிக்காவிற்கு எரிபொருள் பிரச்சினை இருந்தால் அதற்கு தீர்வு வழங்கத் தயார் எனவும், உட்கட்டுமான்ன வசதிகளை மட்டும் மேம்படுத்த வேண்டும் எனவும் கென்னி குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் பிரச்சினைகளின் போது பைடன் அரசாங்கம் ரியாத், தெஹ்ரான், கராகஸ் போன்றவற்றுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு முன்னதாக அல்பர்ட்டாவுடன் பேச வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய நாடுகளை விடவும் கூடுதல் அளவில் கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு எரிபொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு எரிபொருட்களை விநியோகம் செய்யும் முனைப்புக்களில் ஜேசன் கென்னி தலைமையிலான அல்பர்ட்டா அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.