தாஜ்மஹால் சர்ச்சை தொல்லியல் துறை வெளியிட்ட மர்மம்!

0
741

இங்குள்ள சலவைக் கல்துண்டு ஒன்றைப் பிழிய முடியுமானால் அதிலிருந்துகூட அந்த அரசனின் காதலும் சோகமும் சொட்டும்.

இதன் உள்ளே உள்ள அழகு வேலைப்பாட்டைக் கற்க வேண்டுமானால், ஒவ்வொரு சதுர அங்குலத்திற்கும் ஆறுமாதமாவது தேவைப்படும், என்று சுவாமி விவேகானந்தர் தாஜ்மகாலைப் பார்த்த போது கூறினார். அந்த தாஜ்மஹால் இன்று சர்ச்சை கருத்துக்கள் எனும் கல்வீச்சுக்கு உள்ளாகி வருகின்றது. உலக அதிசயங்களில் ஒன்றாக பெருமைபெற்ற தாஜ்மஹால் முழுவதும் பளிங்குக் கற்களாலான உலகப் புகழ் பெற்ற காதல் சின்னம் ஆகும். ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது.

இக் கட்டடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்தியாவின் முக்கிய அடையாளமாகக் கருதப்படும் தாஜ்மஹால், யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலகச் சின்னமாகும். வருடா வருடம் அதிகளவு சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் மிக பெரிய சுற்றுலா தலமாகவும் உள்ளது. ஆனால், இன்று விவாதப் பொருளாகியுள்ளது.

­ ‘தாஜ்­மஹால்’ நினை­வுச்­சின்­னத்தின் பெயர் ராம் மஹால் என்று மாற்றம் செய்­யப்­படும் என பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேந்­திர சிங் கூறி­ ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். மேலும் ஆக்­ராவின் தாஜ்­மஹால், ஒரு­கா­லத்தில் சிவ­பெ­ரு­மானின் ஆல­ய­மாக இருந்­தது. எனவே, உத்­த­ரப்­பி­ர­தேச மாநில முத­ல­மைச்சர் யோகி ஆதித்­ய­நாத்தின் ஆட்­சியில் தாஜ் மஹால் ராம் மஹால் என்று பெயர் மாற்­றப்­படும்,’ என உறுதி அளித்தார்.

தாஜ்மஹால் இருக்கும் இடத்தில் தேஜோ மகால் என்ற இந்துக் கோவில் இருந்தது என்று பா.ஜ.க. எம்.பி. வினய்கத்தியார் ஒரு கதையைச் சொல்லி பிரச்சினையை தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ. சங்கீத்ராம் , தாஜ்மகாலுக்கு வரலாற்றில் இடம்கொடுக்கவே கூடாது என்றார். சுப்பிரமணிய சாமியோ, தாஜ்மஹால் இருக்கும் இடம் ஜெய்ப்பூர் மன்னரிடம் இருந்து ஷாஜகான் வாங்கியது என்கிறார்.

40 ஏக்கர் நிலத்திற்காக, 40 கிராமங்களை ஷாஜகான் கொடுத்தார் என்றும், அந்த இழப்பீடு போதாது என்று ஜெய்பூர் மன்னர் கூறினார் என்றும், அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். தாஜ்மஹால் குறித்து முதலில் ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில்தான் கதைகள் பரப்பப்படும். பின்னர் அந்தக் கதைகளை பாஜக தனது பிரசாரமாக மாற்றுகிறது என்று சமாஜ்வாதி கட்சி எம்.பி. நவாப் மாலிக்கும், பாபர் மசூதியை போல தாஜ்மகாலையும் இடிக்க பா.ஜ.க.வும் காவிக்கூட்டமும் சதி செய்வதாக சமாஜ்வாதி எம்.பி. அசம்கான் குற்றம் சாட்டியிருந்தார்.

இவ்வாறு தாஜ்மஹால் பற்றிய சர்ச்சைகள் தொடர்கின்ற நிலையில் தற்போது மேலும் ஒரு சர்ச்சை உருவானது. தாஜ்மஹாலில் பூட்டப்பட்டு உள்ள 20 அறைகளை திறக்க கோரி பொதுநல வழக்கு ஒன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இதற்கிணங்க தாஜ்மஹாலில் பூட்டப்பட்டுள்ள 20 அறைகளை திறக்கக் கோரிய வழக்கு விசாரணை அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னவ் கிளையில் நீதிபதி டி.கே.உபத்யா மற்றும் சுபாஷ் வித்யார்த்தி அமர்வில் நடைபெற்றது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ”தாஜ்மஹாலின் உண்மை தொடர்பாக நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஏற்கனவே இது தொடர்பாக பல்வேறு மனுக்கள் தொல்லியல் ஆய்வுத்துறையிடல் கொடுக்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு காணங்களுக்காக அந்த அறைகள் பூட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். பூட்டப்பட்டுள்ள அந்த அறைகளில் பல விடயங்கள் மறைந்துள்ளன, அது என்ன என்பது பொது வெளிக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

ஆராய்ச்சி நடத்த வேண்டும் என அந்த சட்டத்தில் எங்கு கூறப்பட்டுள்ளது? அதற்குப் பதிலளித்த மனுதாரர் தரப்பு, தாஜ்மஹால் குறித்து உண்மை கண்டறியும் குழு அமைக்க வேண்டும் என கோருகிறேன். நமக்கு தவறான வரலாறு கற்பித்திருந்தால் அது திருத்தப்பட வேண்டும். மேலும் பூட்டப்பட்ட அறைகளுக்குள் செல்ல தங்களை அனுமதிக்க வேண்டும் என மீண்டும் மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய எம்.ஏ, நெட், ஜே.ஆர்.எஃப் உள்ளிட்ட படிப்புகளில் உங்களை இணைத்து கொண்டு ஆய்வு செய்ய கோருங்கள்.

அனுமதி மறுக்கப்பட்டால் நீதிமன்றத்தை நாடுங்கள். நாளை நீதிபதிகளின் அறைகளுக்குள் செல்லவும், ஆய்வு செய்யவும் அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்திடம் கோருவீர்களா? பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை கேலிகூத்து ஆக்காதீர்கள். இந்த விவகாரம் தொடர்பாக தனியாக விவாதிக்க வாருங்கள் ஏற்கிறோம். ஆனால் நீதிமன்றத்தில் இது போன்று நடந்து கொள்ளாதீர்கள் என்றனர். பின் அலகாபாத் உயர் நீதிமன்றம் இநத பொதுநல வழக்கை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இந்திய தொல்லியல் துறை தாஜ்மஹாலின் 22 நிலத்தடி அறைகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

இந்த அறைகளில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புப் பணிகளைக் காட்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. தாஜ்மஹாலின் அடித்தளத்தில் பூட்டிய 22 அறைகள் குறித்து பரவலான விவாதங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) இந்த அறைகளுக்குள் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புப் பணிகளின் படங்களை வெளியிட்டு பதற்றத்தைத் தணிக்க முயன்றுள்ளது. நாட்டில் உள்ள இந்த அறைகளின் உள்ளடக்கம் குறித்த தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க இந்தப் படங்கள் பொது தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

எவரும் தொல்லியல் துறை இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் தாஜ்மஹாலின் 22 நிலத்தடி அறைகளின் புகைப்படங்களை பார்க்கலாம் என்று தொல்லியல் துறை ஆக்ரா பிரிவின் தலைவர் ஆர் கே படேல் தெரிவித்தார். அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்த அறைகளைத் திறப்பதற்காக பா.ஜ.க.வின் ரஜ்னிஷ் குமார் தாக்கல் செய்த பொதுநல வழக்கை தள்ளுபடி செய்த சில நாட்களுக்குப் பிறகு இந்த படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த மூடிய அறைகளில் பூச்சு மற்றும் சுண்ணாம்பு அலமாரி உட்பட விரிவான மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அறைகளின் மறுசீரமைப்பு பணிக்கு ஆறு இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.