அவருக்கு பதில் இவர்; வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

0
96

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பொலன்னறுவை மாவட்டத்தின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினராக ஜகத் சமரவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதேவேளை கடந்த 9 ஆம்  திகதி அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்திய  கோட்டா கோ கம காலி முகத்திடல்   போராட்டகளத்தில் மஹிந்த ஆதரவாளர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதனையடுத்து வெடித்த கலவரமானதில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள, நிட்டம்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரத்தின் இடையே சிக்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.    

Gallery