தேசிய டெங்கு நோய் பிரிவு பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

0
258

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு நோய் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் கடந்த சில நாட்களாக  டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த மாதத்தில் இது வரையிலான  காலப்பகுதியில் மாத்திரம் 2 ஆயிரத்து எழுநூற்று 97 பேர் டெங்கு நோய் தொற்றாளர்களாக அடையாளம் காணப்ட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.