ஊடகவியலாளர்களின் போன்களை பறித்த எம்.பி.க்கள்!

0
228

நாடாளுமன்றத்தில் ஊடக அறிக்கையிடலை மேற்கொள்ள சமூகமளித்த இரண்டு ஊடகவியலாளர்களை பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தி அவர்களது கையடக்கத் தொலைபேசிகளை கைப்பற்றியதாக சஜித் பிதேமதாச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் , குறித்த தொலைபேசிகளை உடனடியாக உரியவர்களிடம் ஒப்படைக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு சபாநாயகர் மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் குறித்த ஊடகவியலாளர்களை துன்புறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.