ரயில்வே திணைக்களம் வெளியிட்ட தகவல்!

0
195

நாடளாவிய ரீதியில் அனைத்து ரயில் சேவைகளும் இன்று முதல் வழமையான நடைமுறைக்கமைய முன்னெடுக்கப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, அனைத்து அலுவலக ரயில் சேவைகளையும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் மற்றும் தபால் இரயில் சேவைகளும் இன்று முதல் முன்னெடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் 374 ரயிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.