கைவிடப்பட்டது வாழைச்சேனை விவசாயிகள் போராட்டம்!

0
192

மட்டக்களப்பு வாழைச்சேனை கமநல சேவை திணைக்களத்தினால் உரம் விநியோகம் மற்றும் நஷ்டஈட்டுக்கு பதிவதற்கு கட்டாயம் திணைக்களத்தில் பொருட்கள் கொள்வனவு செய்ய வேண்டும் என கூறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாழைச்சேனை கமநல சேவை திணைக்களத்திற்கு முன்பாக சில விவசாயிகள் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளயிருந்த போராட்டமே இவ்வாறு கைவிடப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளயிருந்த போராட்டமே இவ்வாறு கைவிடப்பட்டுள்ளது.

வாழைச்சேனை கமநல சேவை திணைக்களத்தின் கீழ் இருபத்தொன்பது விவசாய அமைப்புக்கள் உள்ளது.

அதில் 7252 பி.எல்.ஆர். காணிகள் உள்ளது. விவசாயிகளுக்கு வழங்குதற்காக மைலம்பாவெளி பாமில் இருந்து மாங்கன்று கொள்வனவு செய்து விவசாயிகளுக்கு கட்டாயத்தின் பேரின் ஒரு கன்று 300 ரூபாவுக்கு விற்பனை செய்தமை காரணமாகவே விவசாயிகள் போராட்டம் செய்வதற்கு தயாரான நிலையில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

வாழைச்சேனை கமநல சேவை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் விவசாயிகளுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் விரும்பினால் மாத்திரம் மரக்கன்றுகளை கொள்வனவு செய்யுங்கள் என வாழைச்சேனை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ஜெயகாந்தன் கூறியதற்கிணங்க விவசாயிகள் போராட்டம் நடாத்தாமல் கலைந்து சென்றனர்.