முள்ளிவாய்க்கால் பிரசுரத்தை கிழித்தவருக்கு சாட்டையடி!

0
774

தமிழர்களிற்கு எதிரான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குறித்த துண்டுபிரசுரங்களை மெல்பேர்னில் சிங்கள நபர் ஒருவர் கிழித்தெறிந்த சம்பவம் தமிழ் மக்களை கொந்தழிக்கச்செய்துள்ளது.

இந்நிலையில் அவுஸ்திரேலியா மெல்பேர்னில் இடம்பெறும் கோட்டா ஹோ கோம் சிங்கள ஆர்ப்பாட்டக்காரர்களை விமர்சித்து இலங்கையை சேர்ந்த பத்திரிகையாளர் சாரா ஹனன் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அவர் அதில்,

இந்த ஆர்ப்பாட்டகாரர்களில் சிலர் யுத்தத்தை காரணம் காட்டி அவுஸ்திரேலியாவிற்கு சென்றிருப்பார்கள் என நான் கருதுகின்றேன். இலங்கை பிரஜை என்ற அடிப்படையில் நான் இவ்வாறான செயலை பார்த்து வெட்கமடைகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உங்களை பார்த்து வெட்கமடைகின்றேன்; முள்ளிவாய்க்கால் பிரசுரத்தை கிழித்தவருக்கு சாட்டையடி!

அதோடு உங்கள் தாய் நாட்டு மக்களுடன் அதிக பச்சாதாபத்துடன் இருங்கள். தெற்கில் நாங்கள் நாளாந்தம் பல உண்மைகளை உணரும் தருணங்களை எதிர்கொண்டுள்ளோம், நாங்கள் செவிமடுப்பதற்கு தயாராகவுள்ளோம் ,யுத்தத்தின் போது இடம்பெற்றதாக தெரிவித்து அரசஇயந்திரம் எங்களை மூளைசலவை செய்துகொண்டிருந்த பக்கசார்பான விடயங்களால் நாங்கள் உண்மையை அறியும் திறனை இழக்கவில்லை.

அங்கு என்ன நடந்தது என்பதை இராணுவமும் தமிழர்களும் தெரிவிப்பதை கேட்க முடிந்ததால் அவ்வேளை நடந்தது குற்றச்செயல் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கின்றோம், எனவே அந்த யுத்த குற்றம் குறித்து ஏழு தசாப்தங்களாக ஆட்சிப்பொறுப்பிலிருந்த அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும் என அவர் பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு பொறுப்பேற்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என அழுத்தம் கொடுத்து, ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்கள் சிலரால், மெல்பேர்ணில் நேற்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அவ்வேளையில் ‘முள்ளிவாய்க்கால்’ நினைவேந்தல் தொடர்பான துண்டு பிரசுரமும், தமிழ் ஆர்வலர்களால் போராட்டக்காரர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இதற்கு சிங்கள போராட்டக்காரர் ஒருவர் கடும் எதிர்ப்பை வெளியிட்டார். அந்த துண்டு பிரசுரத்தை கிழித்தெறிந்ததுடன், இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை எனவும் கூறி யிருந்தமை குறிப்பிடத்தக்கது.