வெளிநாடு சென்ற தமிழ் இளைஞருக்கு நேர்ந்த அவலம்!

0
335

குடும்ப வறுமையை போக்க தமிழகத்தின் ராஜபாளையத்தில் இருந்து டுபாய்க்கு வேலைக்கு சென்ற இளைஞரின் வாழ்க்கை தற்போது பரிதாபகரமாக முடிந்துள்ளது.

டுபாயில் கடந்த சில ஆண்டுகளாக வேலை செய்து வரும் குறித்த இளைஞர் சில தினங்களுக்கு முன்பு அவர் தனது நண்பர்களுடன் கடற்கரைக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பார்த்த விதமாக அலைகளில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து அருகில் இருந்த பாதுகாப்பு பணியாளர்கள் போராடி அவருடைய உடலை மீட்டுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த இளைஞனின் உடல் ஷார்ஜா விமானநிலையத்தில் இருந்து தற்போது தமிழகம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.