ட்விட்டரில் அறிமுகமாகும் ”ட்விட்டர் சர்க்கிள்” !

0
570

இணையதள நிறுவனமான ட்விட்டர் ”ட்விட்டர் சர்க்கிள்” என்ற புதிய அம்சத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.

உலகின் முன்னணி இணையதள நிறுவனமான ட்விட்டரை உலகின் பணக்காரரான எலான் மஸ்க் 44 பில்லியம் டொலருக்கு வாங்கினார்.

இதனைத் தொடர்ந்து, ட்விட்டரில் பல்வேறு பெரிய மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்த்த நிலையில், அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி பயனாளர்களை பிரமிக்க வைத்து வருகிறது.

ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிய சில நாள்களில், எடிட் பட்டன் (Edit Button) என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த போவதாக தெரிவித்து இருந்தது.

இந்தநிலையில், இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்களுக்கு இருக்கும் வசதியான க்ளோஸ்டு ப்ரெண்ட்ஸ் (Closed Friends) என்ற அம்சத்தை போன்று, ”ட்விட்டர் சர்க்கிள்” என்ற புதிய அம்சமும் வெளிவரப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதன்மூலம் 150 பேர் கொண்ட சிறிய குழுவிற்கு மட்டும் ட்வீட் செய்ய முடியும், அந்த 150 பேரால் மட்டுமே உங்கள் ட்வீட்டை பார்க்கவும், அணுகவும் முடியும், ஆனால் அவர்களால் அதை ரீட்வீட் செய்ய முடியாது.

இவை ப்ரொடெக்டட் அக்கவுண்ட் அம்சத்தில் இருந்தும் முற்றிலும் வேறுபட்டது என தகவல் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த எடிட் பட்டன் மற்றும் ட்விட்டர் சர்க்கிள் அம்சமானது இன்னமும் சோதனை வட்டத்தில் மட்டுமே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.