கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை!

0
222

கொழும்பு – கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆமர் வீதி பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தொகுதி பூங்காவிற்கு அருகில் இரு நபர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது உயிரிழந்தவர் 42 வயதுடைய ஆமர் வீதி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.