கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்த ஈரான்!

0
612

இலங்கையைப் போலவே ஈரான் நாட்டிலும் உணவுப் பொருள் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, அந்நாட்டில் கோதுமை விலை மும்மடங்கு உயர்ந்ததன் காரணமாக அடிப்படை உணவுகளின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. அதேபோல, பால் பொருள்கள், சமையல் எண்ணெய் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரே இந்த விலை உயர்வுக்கு காரணமாக கருதப்படுகிறது.

இந்த விலைவாசி உயர்வு தாக்கம் ஈரான் மக்களிடையே சில வாரங்களுக்கு முன்னதாகவே சலசலப்பை ஏற்படுத்த தொடங்கியது. மக்கள் சமூக வலைத்தளம் மூலம் அணி திரண்டு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், கடந்த வாரத்தில் அங்கு இணையதளங்கள், சமூக வலைத்தளங்கள் சேவையை முடக்கி அரசு உத்தரவிட்டது.

இதையும் மீறி கடந்த இரு நாள்களாக அங்கு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இந்த போராட்டக்காரர்களை கலைக்கும் நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்ட நிலையில், 15 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.