திருமணத்திற்கு தயாரான மணமகன் விபத்தில் மரணம்!

0
323

இலங்கையில் திருமணத்திற்கு தயாரான மணமகன் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது திருமண நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு திருமண அழைப்பிதழ் விநியோகிப்பதற்காக காரில் பயணித்த இளைஞன் விபத்துக்குள்ளாகி காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் பட்டிகல பெரலபநாதர பகுதியைச் சேர்ந்த கசுன் லக்ஷான் (வயது 28) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இறந்தவரின் திருமணம் மே 12ஆம் திகதி நடைபெறவிருந்தது. இவர் கடந்த முதலாம் திகதி மதியம் திருமண அழைப்பிதழ் விநியோகம் செய்வதற்காக நண்பருடன் பயணித்த போது ஊருபொக்க நகருக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் மோதி விபத்துக்குள்ளானார்.

விபத்தில் காயமடைந்தவர் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 14ஆம் திகதி குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன.