இன்றைய ராசி பலன்கள் – ஞாயிற்றுக்கிழமை மே 15, 2022

0
737

இன்றைய கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம் …

மேஷம் 

கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றுவீர்கள். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். இருந்த மறைமுக எதிரிகள் குறைய கூடிய வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் கூட அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். அதன்மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும்

குடும்பத்தில் கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். கடந்தகால சோதனைகள் எல்லாம் விலகி அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் மட்டும் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். உணவு விஷயத்தில் கவனமாக இருங்கள் பயணங்களின் போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம்.

ரிஷபம்

பணவரவுகள் சாதகமாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. இருப்பதை அனுபவிப்பதற்கு கூட இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்துச் செல்வது அவசியம். தொழில் வியாபாரத்தில் உங்கள் நிலை சாதகமாக இருந்தாலும் வேலையாட்களைச் சற்று அனுசரித்து செல்வது அவசியம்.

சில நேரங்களில் பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது சிந்தித்து நிதானமாக செயல்பட்டால் இருப்பதை சமாளிக்க முடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. பேச்சில் பொறுமையோடு இருந்தால் அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். தூரப் பயணங்களை தள்ளி வைப்பது மிகவும் நல்லது.

மிதுனம் 

உங்களுக்கு சகல விதத்திலும் மேன்மையான பலன்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சியில் ஒரு வளமான பலனை எதிர்பார்க்கலாம். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலமாக அனுகூலமான பலன்களை அடைய கூடிய வாய்ப்புகள் இன்று உண்டு.

தொழில் ரீதியாக இருந்த தயக்கங்கள் எல்லாம் நீங்கி ஒரு லாபகரமான பலனை எதிர்பார்க்கலாம். வேலை ஆட்கள் மூலமாக ஏற்பட்ட பிரச்சினைகள் எல்லாம் விலகி நிம்மதி ஏற்படும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். உங்களின் வேலை சுமை குறையும். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பதால் கடினமான வேலையை கூட சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

சிம்மம் 

பல்வேறு வகையில் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் என்று ஏற்படும். பணவரவுகள் சாதகமாக இருக்கும் என்பதால் எதையும் எளிதில் எதிர்கொள்வீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள் பேச்சில் சற்று பொறுமையுடன் இருப்பது மிக மிக அவசியம். தொழில் ரீதியாக நல்ல வாய்ப்புகளை பெறக்கூடியதாக இருக்கும். வேலையாட்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

வேலைக்கு செல்பவர்கள் நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். என்றாலும் அதிகாரிகளுடன் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். வண்டி வாகனங்கள் மூலமாக உங்களுக்கு சுபச்செலவுகள் ஏற்படும் என்பதால் எதிலும் சற்று பொறுமை காக்கவும். தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

கடகம் 

உங்களுடைய பலமும் வலிமையும் அதிகரிக்கக்கூடிய நாள். நினைத்தது நடக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்பதால் கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் மாறும். நீங்கள் இருக்கும் இடத்தில் உங்களுக்கான மதிப்பு மரியாதை கூடும்.

கடன் தொல்லையிலிருந்து விடுபட்டு சேமிப்பை எதிர்பார்க்கலாம். தொழில்ரீதியாக ஒரு வளமான பலனை அடைவீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கான வேலைப்பளு சற்று குறைந்து சாதகமான பலன்கள் கிடைக்கும்.

கன்னி 

நீங்கள் சற்று நிதானமாக செயல்பட்டால் வளமான பலன்களை அடையலாம். பணவரவுகள் சாதகமாக இருந்து உங்களுடைய தேவைகளை அனைத்தும் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்துச் செல்வது அவசியம். கோபத்தை குறைப்பது நல்லது

உறவினர் வகையில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழில் வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச் சென்றால் லாபகரமான பலன்களை அடையலாம். உங்கள் பணியில் கண்ணும் கருத்துமாக இருந்து நல்ல வாய்ப்புகளை பெறலாம் பேச்சில் சற்று நிதானமாக இருப்பது அவசியம்.

விருச்சிகம் 

எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை அடைவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். பணவரவுகள் சாதகமாக இருக்கும் என்பதால் கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் நீங்கும். இருக்கும் இடத்தில் உங்களுக்கான மதிப்பு மரியாதை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒரு பெரிய மனிதர்களின் ஆதரவு கூட உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

தொழில் வியாபாரத்தில் சற்று பொறுமையுடன் செயல்பட்டால் அடைய வேண்டிய லாபத்தை அடையலாம். வேலைக்கு சொல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். என்றாலும் சக ஊழியர்களிடம் பேசும்போது சற்று பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். இதனால் சாதகமான பலன் உண்டாகும் குறிப்பாக கணவன் மனைவியிடையே சற்று விட்டுக்கொடுத்து செல்வது அவசியம்.

துலாம் 

நீங்கள் நினைத்தது எல்லாம் நன்றாக நடக்கும் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள் பணவரவுகள் சாதகமாக இருக்கும். தொழில் ரீதியாக இலாபகரமான பலனை எதிர்பார்க்கலாம் நண்பர்கள் மூலமாக சில அனுகூலமான பலன்களை பெறலாம். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நடைபெறலாம்.

வேலைக்கு செல்பவர்கள் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் .நீண்ட நாட்களாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்க வாய்ப்புகள் உண்டு. வெளியூர் மூலமாக ஒரு அனுகூலமான செய்தி வர வாய்ப்புள்ளது. ஒரு பெரிய மனிதர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும் என்பதால் மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்படும். குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் சிறப்பாக நடக்க வாய்ப்புள்ளது.

மகரம் 

உங்களுடைய வளமும் வலிமையும் கூட கூடிய நாளாக என்று இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றுவீர்கள். தொழில்ரீதியாக லாபகரமான பலன்களை நீங்கள் அடைவீர்கள். வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

பணவரவு தாராளமாக இருக்கும் என்பதால் கடந்த கால கடன் பிரச்சனைகள் எல்லாம் நீங்கும். முதலீடுகள் செய்யக்கூடிய அளவிற்கு உங்களுடைய பொருளாதார நிலை மேம்படும். பதவி உயர்வுகள் காத்திருக்கும் மேலதிகாரிகள் சக ஊழியர்களுடனான கருத்து வேறுபாடுகள் எல்லாம் நீங்கி உன்னத நாளாக அமையும்.

தனுசு 

எடுக்கும் முயற்சியில் தேவையற்ற தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பதை அனுபவிப்பதற்கு கூட முடியாமல் போகலாம் பணவரவுகள் சாதகமாக இருந்து, உங்களுடைய நெருக்கடிகள் சற்று குறையும். இருப்பினும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது அவசியம். தொழில் வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது என்பதால் எதிலும் நீங்களே முன்னின்று செயல்பட வேண்டிய நிலை இருக்கும்.

வேலைக்கு செல்பவர்கள் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சக ஊழியர்களுடன் நிதானித்து பேசுவது அவசியம். சில நேரங்களில் மற்றவர்களின் வேலையை கூட நீங்கள் முடிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். அதனால் எதிலும் சற்று பொறுமையுடன் இருப்பது அவசியம். குறிப்பாக முன்கோபத்தை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

கும்பம் 

உங்களுக்கு பல வகையில் சாதகமான பலன்களை பெறக்கூடிய இனிமையான நாளாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலமாக உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோசமும் ஏற்படும்.

தொழில் ரீதியாக இலாபகரமான பலன்களை அடைய கூடிய வாய்ப்புகள் உள்ளன. வேலை செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். அதுமட்டுமின்றி நவீனகரமான பொருட்களை வாங்க கூடிய வாய்ப்பு கிடைக்கும். ஒரு பெரிய மனிதர்களின் ஆதரவு கூட கிடைக்கலாம். வெளியூர் மூலமாக உங்களுக்கு நல்ல செய்தி வர வாய்ப்புள்ளது.

மீனம் 

எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். எடுக்கும் முயற்சியில் தேவையற்ற தடை படங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் மற்றவர்களுக்கு நல்லது என ஏதாவது செய்தாலும் அவர்களுக்கு தவறாக பட வாய்ப்புள்ளது. பொதுவாக குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

வியாபாரத்தில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படலாம். வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வது மிக மிக அவசியம். வேலைக்கு செல்பவர்கள் உங்களுடைய வேலையை மட்டும் கண்ணும் கருத்துமாக செய்வது அவசியம். அதிகாரிகளுடனும் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது .இன்று நாள் முழுவதும் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம்.