மே 18 நினைவு தினம் தொடர்பில் ரணிலுக்கு முக்கிய கடிதம்

0
580

வடக்கு மாகாண சபை தலைவர் சி.வி.கே.சிவஞானம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். வடமாகாண சபை அவைத்தலைவர் நேற்று பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்காலில் ஆயுதப்படையினரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் கூட்டு நினைவேந்தல் ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுவது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இந்துக்கள் மற்றும் பௌத்தர்களாகிய நாம் வன்முறையால் கொல்லப்பட்ட ஆன்மாக்களின் சாபம் பற்றி அறிவோம்.

இந்த ஆன்மாக்களின் சாபத்தால் இந்த நாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. கர்மாவின் விளைவுகள் இந்த நாட்டைப் பாதிக்கின்றன என்பதும் தெளிவாகிறது.

இந்த ஆன்மாக்களை நினைத்து பிரார்த்தனை செய்வதன் மூலம் அவர்கள் அமைதி பெறுவார்கள் என்பது நமது மத நம்பிக்கை. 18.05.2022 அன்று படுகொலைகள் இடம்பெற்ற முள்ளிவாய்க்காலில் மேற்குறிப்பிட்டவாறு உயிரிழந்துள்ள ஆன்மாக்களுக்கு தமிழ் மக்கள் தமது அஞ்சலியையும் சாந்திப் பிரார்த்தனைகளையும் வழங்குவதில் உறுதியாக உள்ளனர்.

எவ்வாறாயினும், இதனை தடுக்க முல்லைத்தீவு பொலிஸார் ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருவது கவலையளிக்கிறது.

இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் நமது அடிப்படை மத மற்றும் சமூக உரிமைகளை மறுப்பது ஆகும். எனவே இவ்விடயத்தில் தலையிட்டு முல்லைத்தீவு பொலிஸாருக்கு 18.05.2022 புதன்கிழமை அன்று முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவேந்தல் மற்றும் பிரார்த்தனை நிகழ்வுகளில் தலையிடாத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.