அமரகீர்த்தி மரண சந்தேகநபர்கள் நால்வர் கைது!

0
118

நிட்டம்புவ பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மரணம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்களால் காலி முகத்திடல் போராட்டம் தாக்கப்பட்டதை அடுத்து நிட்டம்புவ பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டிருந்தது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.