ரோஹினி கவிரத்னவுக்கு 11 கட்சிகள் ஆதரவு!

0
318

நாட்டின் பிரதி சபாநாயகருக்கான தேர்வின்போது ரோஹினி கவிரத்னவை (Rohini Kaviratne) ஆதரிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் கூட்டணி தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றம் எதிர்வரும் 17 ஆம் திகதி கூடும்போது முதல் விடயமாக பிரதி சபாநாயகர் தேர்வு இடம்பெறும்.

இதன்போது பிரதி சபாநாயகர் பதவிக்கு ரோஹினி கவிரத்னவை பெயரிடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியும் அஜித் ராஜபக்ஷவை களமிறக்குவதற்கு மொட்டு கட்சியும் முடிவெடுத்துள்ளன.

இந்த நிலையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரை ஆதரிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் கூட்டணி தீர்மானித்துள்ளன.