போர்க்குற்ற விசாரணையை ஆரம்பித்த உக்ரைன்!

0
442

ரஷ்யாவின் படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்ட பின்னர், முதல் தடவையாக, உக்ரைன் தனது போர்க்குற்ற விசாரணையை ஆரம்பித்துள்ளது.

இதன்படி, 21 வயதுடைய சிப்பாய் ஒருவர், நிராயுதபாணியான குடிமகனைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்;டுள்ளார்.

வாடிம் ஷிஷிமர் என்ற சிப்பாய், தலைநகர் கியேவில் ஒரு ஆரம்ப விசாரணையில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்தநிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும்.

ஏற்கனவே ரஷ்யாவினால் இழைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான போர்க்குற்றங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.