இலங்கைக்கு உதவ கூட்டு நிதியம் நிறுவ திட்டம்!

0
665

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையை மீட்பதற்காக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், இந்தியா நாடுகள் இணைந்து கூட்டு நிதியம் நிறுவ ஏற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன.

நாட்டில் தற்போது இடம் பெற்று பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அரச தலைவரையும் அரசாங்கத்தையும் பதவி விலக கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் வலுப்பெற்று அதனுள் வன்முறை திணிக்கப்பட்டதன் காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகி இருந்தார்.

அதன் பின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றத்தை அடுத்து பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையை மீட்பதற்காக கூட்டு நிதியம் நிறுவ ஏற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன.