யாழ் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் நாள் நினைவேந்தல்!

0
116

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் ஆத்மார்த்தரீதியாக பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் மதியம் 12 மணியளவில் இடம்பெற்றது.

இதன்போது முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மாணவர்களாலும் பல்கலைக்கழக ஊழியர்களாலும் மலரஞ்சலி செலுத்த்தியதோடு ஈகைச்சுடர் ஏற்றி ஒரு நிமிட அகவணக்கமும் இடம்பெற்றது.