ஜனாதிபதியிடம் பொலிஸாரை சாடிய எம்.பி!

0
126

நாடு முழுவதும் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் தீ வைப்புச் சம்பவங்கள் மற்றும் சொத்து அழிவை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பிக்கள் குழு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று கூடிய போது இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

இந்தக் கூட்டத்துக்கு பொலிஸ்மா அதிபரும் அழைக்கப்பட்டிருந்த நிலையில் எம்.பி.க்கள் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தீ வைப்பு மற்றும் வாகனங்களுக்கு சேதம் விளைவிப்பதை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.