ஏரிக்குள் புதைக்கப்பட்ட நிலையில் மனித சடலங்கள்!

0
577

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் நீர்மட்டம் குறைந்த ஏரி ஒன்றில் மனித சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கொலராடோ மாகாணத்தில் மனிதரால் உருவாக்கப்பட்ட மீட் ஏரியில் இருந்தே மனித சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மாகாணத்தில் கடும் வரட்சியை அடுத்து மீட் ஏரியில் நீர் மட்டம் குறைந்து காணப்படுகிறது.

இந்த நிலையிலேயே இரண்டு ஜோடி சடலங்களை அதிகாரிகள் தரப்பு மீட்டுள்ளனர். சம்பவத்தின் போது இரு சகோதரிகள் துடுப்பு படகில் சென்றுள்ளனர். அப்போது மண் திட்டில் காணப்பட்ட காட்சி அவர்களுக்கு விசித்திரமாக பட்டுள்ளது.

முதலில் விலங்குகளின் எச்சம் என கருதிய அவர்களுக்கு பின்னர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியில் இருந்து மனித எலும்புகளை அவர்கள் கண்டெடுத்துள்ளனர்.

மட்டுமின்றி, அப்பகுதியில் இருந்து பீப்பாயில் புதைக்கப்பட்ட நிலையில் அழுகிய மனித உடலையும் மீட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டு, பின்னர் பீப்பாயில் அடைத்து ஏரியில் புதைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

1970களில் அல்லது 1980களின் தொடக்கத்தில் குறித்த சம்பவம் நடந்திருக்கலாம் என அதிகாரிகள் தரப்பு கூறுகின்றது. மேலும், குறித்த ஏரியில் மேலும் பல சடலங்கள் புதைக்கப்பட்ட நிலையில் காணப்படலாம் என்றே அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளது.