கோலியின் மோசமான ஆட்டம்.. விரக்தியடைந்த பெங்களூரு கேப்டன்

0
847

பெங்களூரு அணி வீரர் கோலி தொடர்ந்து சொதப்பி வருவதால், அந்த அணித்தலைவர் பாப் டூ பிளீசிஸ் விரக்தியடைந்துள்ளார்.

நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில், பஞ்சாப் அணி 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. 210 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணியில், விராட் கோலி 20 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆகி சொதப்பினார்.

இந்த நிலையில் போட்டி முடிந்த பின்னர் பேசிய பெங்களூரு அணித்தலைவர் பாப் டூ பிளீசிஸ் கூறுகையில், ‘அவர்களை 200 ஓட்டங்களுக்கு மேல் அடிக்க விட்டிருக்கக் கூடாது. நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து விடுகிறோம். அது தான் எங்களுக்கு பிரச்சனையாக இருக்கிறது. நேற்று எங்களுக்கு சிறந்த இரவாக அமையவில்லை. எப்படி எல்லாம் அவுட் ஆக முடியுமோ கோலி அப்படி எல்லாம் ஆட்டமிழக்கிறார். அப்படி தான் விளையாட்டு செயல்படுகிறது.

நீங்கள் (கோலி) கடினமாக, கடின உழைப்பில் ஈடுபடுகிறீர்கள், அதனுடன் மனநிலையும் சரியானதாக இருக்க வேண்டும். சில நல்ல ஷாட்களை அவர் ஆடினார், அதனையே தொடர வேண்டும் என அவர் விரும்புவார்’ என தெரிவித்துள்ளார்.

கோலி கடினமான வலைப்பயிற்சியில் ஈடுபட்டுதான் வருகிறார். ஆனாலும் அவரால் நிலையான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. எனவே வலைப்பயிற்சியுடன் மனதிலும் நல்ல மாற்றத்தை அவர் கொண்டு வரவேண்டும் என மறைமுகமாக பாப் கூறியுள்ளார்.