இந்தியாவின் மேற்கு டெல்லியில் உள்ள கட்டடம் ஒன்றில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது.

இந்த தீ விபத்தில் 26 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன், 40க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், 60 – 70 பேர் வரை குறித்த கட்டடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கட்டிடத்திற்குள் பலர் சிக்கியுள்ளனர். இதனால், உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. டெல்லி தீ விபத்தில் இதுவரை 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என டெல்லி சுகாதார துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின் உறுதிப்படுத்தி உள்ளார்.

தீ விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று இந்திய பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.