ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு கிடைக்கும் வாய்ப்பு!

0
170

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இம்மாதம் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படலாம் என அரசாங்கத் தகவல்களை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

நீதிமன்றத்தை அவமதித்ததற்காக ராமநாயக்க தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்த நிலையில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் பல தரப்பினர் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

என்ற போதும் அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாத நிலையில் தற்போது இந்த செய்தி வெளியாகியுள்ளது.