கொலம்பியாவில் காட்டுத்தீயின் பின்னணியில் ஒரு பெண்!

0
512

கனேடிய மாகாணமாக பிரிட்டிஷ் கொலம்பியாவில் பல இடங்களில் இந்த வசந்த காலத்தின் துவக்கத்தில் காட்டுத்தீ உருவானது.

அந்த இடங்களின் வனத்துறை மேற்கொண்ட ஆய்வில் பல இடங்களில் யாரோ தீவைத்ததால் காட்டுத்தீ பரவியிருந்தது தெரியவந்தது.

இதற்கிடையில் Monte ஏரிப்பகுதியில் வாழும் ஒருவர், அருகிலுள்ள மலைப்பகுதியில் புகை வருவதையும், அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு நீல நிற ட்ரக் நிற்பதையும் கவனித்து அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

அதிகாரிகளும், இதுபோல சந்தேகத்துக்குரிய ட்ரக்கைப் பயன்படுத்தும் ஒருவர் குப்பைகளைக் கொளுத்திவருவதாகவும், அது குறித்துத் தெரியவந்தால் தங்களுக்குத் தகவல் கொடுக்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

இந்நிலையில், அந்த ட்ரக்கை தாங்களும் பல இடங்களில் பார்த்ததாகவும், அதை ஒரு பெண் இயக்குவதாகவும் அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளார்கள்.

அதைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய அதிகாரிகள், இந்த தீவைப்பின் பின்னணியில் செயல்பட்ட Kamloops பகுதியைச் சேர்ந்த Angela Elise Cornish (42) என்ற பெண்ணைக் கைது செய்துள்ளார்கள்.

அவர் மீது நான்கு தீவைப்புக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது ஜாமீன் தொடர்பான வழக்கு விசாரணை திங்கட்கிழமை நடைபெற உள்ளது.