சீனாவை கடுமையாக விமர்சித்த உலக சுகாதார அமைப்பு!

0
96

சீனாவின் ஜீரோ கொரோனா திட்டத்தை உலக சுகாதார அமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது.

கொரோனா பாதிப்பின் தாக்கம் உலகம் முழுவதும் 2022ம் ஆண்டு முதலே குறைந்து வருகிறது. இந்த நிலையில் சீனாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் கண்டறிந்துள்ளது.

இதனை தொடர்ந்து கொரோனா பரவலை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீனாவின் இந்த கடும்போக்கு நடவடிக்கையானது உலகளவில் கடும் விமர்சனங்களை எழுப்பியது.

இந்த நிலையில் கொரோனாவுக்கு எதிரான சீனாவின் திட்டத்தை மாற்றி கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் தெரிவிக்கையில், ‘ஜீரோ கொரோனா’ கொள்கையை சீன அரசு அமல்படுத்தி உள்ளது .

இதன் மூலம் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலையை அடைவதுதான் இதன் நோக்கம். இதற்காக கடுமையான ஊரடங்குகளை சீனா அமுலுக்கு கொண்டுவந்துள்ளது.

இந்த நடவடிக்கை ஷாங்காய், பீஜிங் உள்ளிட்ட பல நகரங்களில் அமுலில் உள்ளது. இந்த கடும்போக்கு நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் பல பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவற்றை எல்லாம் சீன அரசு கருத்தில் கொள்ள வேண்டும். சீனாவின் நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், உலக சுகாதரா அமைப்பின் விமர்சனத்துக்கு சீனா இதுவரை பதிலளிக்கவில்லை என்றே தெரிய வந்துள்ளது. 2019ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுக்கு அந்த நாட்டில் இதுவரை 15,000 பேர் வரை பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.