இன்றைய ராசிபலன் (13 மே 2022)

0
573


​மேஷம்

​நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசாங்கத்தின் பலன்களைப் பெறலாம். நீங்கள் சரியான நேரத்தில் வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தினால், உங்கள் தொழில் வாழ்க்கை எதிர்காலத்தில் உங்களுக்கு மகத்தான நன்மைகளைத் தரும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும்.

​ரிஷபம்

இன்று உங்களின் தன்னம்பிக்கையும் தைரியமும் உச்சத்தில் இருக்கும். அரசியல் அல்லது சமூகப் பணிகளுடன் தொடர்புடையவர்களுக்கு மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்களின் மரியாதை அதிகரிக்கும், பணியிடத்தில் சில புதிய பொறுப்புகளையும் பெறலாம். சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.

​மிதுனம்

மிதுன ராசியின் ஆரோக்கியம் மேம்படும். குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். வருமானம் அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம். உங்களின் செல்வாக்கும் கௌரவமும் அதிகரிக்கும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் வேலைகள் மற்றும் திட்டங்கள் நிறைவேறியதில் திருப்தி அடைவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனான உங்கள் உறவு மேம்படும்.

​கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று கலவையான பலன்கள் கிடைக்கலாம் ஆனால் பெரும்பாலானவை உங்களுக்கு சாதகமாக இருக்கும். பயனற்ற செயல்களில் உங்கள் நேரத்தையும் சக்தியையும் வீணாக்காதீர்கள்.

உங்கள் செயல்களிலும், திட்டங்களிலும் கவனம் செலுத்துங்கள். நீங்கள் ஏதேனும் முதலீடு செய்ய விரும்பினால், நிபுணர்களின் வழிகாட்டுதலைப் பெறுவது நல்லது.

​சிம்மம்

சிம்ம ராசிக் அதிர்ஷ்டமான காலமாக இருக்காது. உடன்பிறந்தவர்களுடன் சண்டை சச்சரவுகள் குடும்ப வாழ்க்கையில் நிலையற்ற தன்மையை ஏற்பட வாய்ப்புள்ளது. காதல் உறவுகளில் மேன்மை உண்டாகும். அர்ப்பணிப்புடன் வேலைப் பார்ப்பதும், விடாமுயற்சியான செயல்பாடுகளால் மேலதிகாரிகளின் நன்மதிப்பு பெறலாம். நிதி நிலைமை மேம்படும்.

கன்னி

கன்னி ராசிக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். அதை முறையாக பயன்படுத்தி நன்மை அடையுங்கள். உங்களின் நிதி வளம் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல்நலம் கவலைத் தருவதாக இருக்கும். சொத்து விஷயங்களில் மனவருத்தம், தகராறுகள் ஏற்படும் அதனால் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும்.

​துலாம்

துலாம் ராசிக்கு தொழில், வியாபார சூழல், புதிய வணிக உணர்வுகள், ஒப்பந்தங்கள் சாதகமாக முடிவதற்கான நாளாக இருக்கும். காதல் தொடர்பான விவகாரங்களில் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். குடும்ப விஷயங்களில் நிதானமாகச் செயல்படுவது நல்லது. கோபம், ஆவேசம் காரணமாக குடும்பத்தில் சில தகராறுகள் ஏற்படலாம். பெண்கள் தாய்வழியில் நன்மைகள் அடைவீர்கள்.

​விருச்சிகம்

விருச்சிக ராசியினர் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கூடி மகிழக்கூடிய நாளாக இருக்கும். வணிக திட்டங்களில் மிகவும் ஆர்வமாகவும், நம்பிக்கையுடனும் இருப்பீர்கள். உங்களின் திட்டத்தால் எதிர்காலத்தில் நல்ல பலனை முழுமையாக பெறும் விதமாக இருக்கும். நீதிமன்ற வழக்கு தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.

​தனுசு 

தனுசு ராசிக்கு மன மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை, வியாபார கூட்டாளிகளின் நல்லாதரவு சிறப்பாக இருக்கும். சில குழப்பமான மனநிலை கரணமாக எந்த ஒரு முடிவுக்கும் செல்ல முடியாத மன நிலையில் இருப்பீர்கள்.

பணியிடத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டிய நாள். மற்றவர்களை அனுசரித்துப் போவது அவசியம். உங்களின் பலவீனங்களை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதால் யாரிடமும் பகிர வேண்டாம்.

​மகரம்

இன்று நீங்கள் தொழில் ரீதியாக முன்னேறுவீர்கள். உங்கள் பணிக்காக பணியிடத்தில் பாராட்டுக்குரியவராக மாறலாம். சிலர் புதிய சங்கம் அல்லது கூட்டமைப்புக்குள் இடம் பெறவும், அதன் மூலம் பயனடைய நினைப்பீர்கள். உங்களின் செயல்பாடு மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்பதால் எதிரிகளால் உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது. நிலையான வருமானம் உங்களை சிறந்த நிலைக்கு உயர்த்தும்.

​கும்பம்

இன்று மதியம் வரை உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அது வரை சற்று கவனமாக நடந்து கொள்வது அவ்சியம். புதிய முயற்சிகள் வேண்டாம். முக்கிய முடிவுகள், ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது ஒருநாள் தள்ளிவைப்பது நல்லது.

பிற்பகலுக்குப் பின் வணிகத் துறையில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். செல்வாக்கு மிக்கவர்களின் தொடர்பு நன்மை தரும். வியாபாரிகள் கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் தரக்கூடிய நாள். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும்.

மீனம்

இன்று மதியத்திற்கு மேல் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் வருவதால் உங்களில் சிலருக்கு மிகவும் சர்ச்சைக்குரிய நாளாக இருக்கும். உங்கள் மேலதிகாரிகளிடம் மதிப்பு கொடுத்து நடந்து கொள்ளவும். பணியிடத்தில் நீங்கள் சில எதிர்ப்புகளை எதிர்கொள்ள நேரிடலாம். சக ஊழியர்கள் உங்கள் பலவீனங்களைப் பயன்படுத்திக் கொள்ள நினைப்பார்கள்.