கோட்டாபயவுக்கு மூன்று பிரதிநிதிகள்!

0
809

புதிய அமைச்சரவையில் ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக கடந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகித்த தினேஸ் குணவர்த்தன, டக்ளஸ் தேவானந்தா மற்றும் அலி சப்ரி ஆகியோரை இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ள போதும் அமைச்சரவையை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படபோதும் அமைச்சரவை உடனடியாக நியமிக்கப்படவில்லை.

இடைக்கால அரசாங்கத்தில் இணையும் உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அமைச்சுப் பதவிகளை ஒதுக்கும் நபர்கள் தொடர்பில் நிலவும் பிரச்சனைகள் காரணமாகவே அமைச்சரவையை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து உறுப்பினர்கள் குழுவொன்றை இடைக்கால அரசாங்கத்தில் இணைத்துக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி பெரும்பான்மையை உறுதி செய்த பின்னர் அமைச்சரவை நியமனத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.