ஊழியர்கள் விடுமுறை நாட்களைப் பற்றி சிந்திக்காமல் தொடர்ந்தும் பணியாற்ற தயாராக இருக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
பிரதம செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இன்று இந்த பணிப்புரை விடுத்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் வெசாக் போயா தினத்தை உள்ளடக்கிய விடுமுறை வார இறுதியானது, பிரதமர் அலுவலகத்தில் தொடர்ச்சியான வேலை வாரமாக இருக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள், மின்சாரம், எரிவாயு, உணவுப் பொருட்கள், உரங்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருட்கள் தொடர்பான உண்மையான நிலைமை குறித்த அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தீர்வுகளை வழங்குவதற்கு முன்னர் மக்கள் உண்மையைக் கூறத் தொடங்குவதே பொருத்தமானது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.