இந்தியா செல்லவிருக்கும் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில்!

0
126

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க, புதுடில்லிக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆறாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ள அவர், இம்மாத இறுதிக்குள் டெல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது இலங்கை  தற்போது எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார நெருக்கடி குறித்து இருநாட்டு பிரதமர்களும்  விவாதிப்பார்கள்  என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை 2020 தேர்தலில் ஐ.தே.க பிரதமர் தனது சொந்த தொகுதியில் கூட வெற்றி பெறாததால், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது எனும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் ஆசனத்தின் மூலம் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.