பதவிகளை ஏற்கப்போவதில்லை ஆனால்… சேர்ந்து செயல்படுவோம்!

0
416

புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தெரிவித்த கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். எனினும் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு புதிய அரசாங்கத்தின் சிறந்த செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என கூறியுள்ளார்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில ஆகியோர் பிரதிநிதித்துவம் செய்யும் 10 கட்சிகளின் கூட்டணி புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளது.

இத்தகவலை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதித் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது