இலங்கை ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி வீழ்ச்சி!

0
649

நீண்ட நாட்களின் பின்னர் இலங்கையில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை குறைந்துள்ளது.

அதன்படி, இலங்கையில் பல உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 365 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அதேவேளை நேற்றையதினம் டொலரின் விலை 380 ரூபாவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரணில் விக்ரமசிங்க பிரதமாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரத்தின் சரிவு நிறுத்தப்படும் என பரவலாக நம்பப்படுகிறது.

மேலும் , ஜப்பானிடமிருந்து 2 பில்லியன் டொலர்களைப் பெறுவதற்கான பேச்சுக்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.