ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு இன்று கூடவுள்ளது!

0
248

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று (13) கூடவுள்ளது.

கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சி தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மத்திய குழுவினால் எடுக்கப்படும் தீர்மானம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவுடன் கலந்துரையாடப்படவுள்ளது.