இசையமைப்பாளர் இராஜ் வீரரத்ன வன்முறை குழுவினருக்கு இறுதி எச்சரிக்கை!

0
346

இசையமைப்பாளர் இராஜ் வீரரத்ன இந்த வாரம் கொழும்பில் உள்ள அவரது குடும்ப வீட்டின் மீது தாக்குதல் நடத்திய குழுவினருக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஃபேஸ்புக் பதிவில், வீட்டின் மீது தாக்குதலை நடத்தியவர்கள், திருடிச் சென்ற பொருட்களை திருப்பித் தரவேண்டும் அல்லது விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று இராஜ் கூறியுள்ளார்.

திருடப்பட்ட பொருட்களை திருப்பி கொடுத்தால் அவர்களுக்கு பண உதவி செய்யவும் தாம் தயார் என்று இராஜ் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள தனது பெற்றோரின் வீட்டில் தாக்குதல் நடத்தியவர்களின் சிசிடிவி காட்சிகளை இராஜ் வெளியிட்டார்.

பொருட்களை திருப்பி கொடுத்தால் சிறைக்கு செல்லவேண்டியதில்லை என்றும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.