தலை தூக்கும் கொரோனா: முதன்முறையாக முக கவசம் அணிந்த நாட்டு தலைவர்!

0
347

உலகளாவிய கொரோனா அச்சுறுத்தலை தடுத்திருந்த வடகொரியாவில் தற்போது தான் தொற்று தீவிரமடையும் நிலையில், அந்நாட்டு தலைவர் கிம் ஜோங் உன் முதன்முறையாக முக கவசம் அணிந்த படி நடமாடுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தொற்று அச்சுறுத்தலுடன் வடகொரியாவில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ள நிலையில், அங்கு கடுமையான கட்டுப்பாடுகளும் நடைமுறையில் உள்ளன.

உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று, அச்சுறுத்தலை ஏற்படுத்திய தருணத்தில் வடகொரியா சிறப்பாக அதனை தடுத்திருந்தது.

அனைத்து நாடுகளின் சர்வதேச தொடர்புகளை துண்டித்து தொற்றுப் பரவுவதை தடுத்திருந்தது.

எனினும் தற்போது உலகளாவிய கொரோனா தொற்று சற்று தணிவு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், வடகொரியாவில் தொற்று புதிய அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. அங்கு பல்லாயிரம் பேர் காய்ச்சல் அறிகுறிகளைக் கொண்டுள்ளதாக அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வடகொரியாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதில் ஒருவருக்கு கொரோனா தொற்றின் ஒமைக்ரோன் திரிபு இருந்தமை கண்டறியப்பட்டுள்ளதுடன், வடகொரியாவில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.