நீதிமன்ற உத்தரவுக்கு நாமல் போட்ட டிவிட்!

0
916

வெளிநாடு செல்வதற்கு மஹிந்த ராஜபக்ச, நாமல் மற்றும் ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 17 பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவையடுத்து நாமல் டுவிட்டரில் பதிவொன்றை  பதிவிட்டுள்ளார்.

அதில், திங்கட்கிழமை இடம்பெற்ற துரதிஷ்டவசமான நிகழ்வுகள் தொடர்பாக நடைபெறும் எந்தவொரு விசாரணைக்கும் தனிப்பட்ட முறையில் எனது பூரண ஒத்துழைப்பை வழங்குவேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதோடு எனது தந்தைக்கோ அல்லது எனக்கோ இந்த நாட்டை விட்டு வெளியேறும் நிலை இல்லை என கூறிய நாமல், தொடர்ந்தும் தாம் நாட்டிலேயே இருப்போம் எனவும் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.