விரைவில் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம்!

0
350

எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முதலில் பிரதி சபாநாயகரை தெரிவு செய்ய கட்சி தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.