பிரதமரான ரணில்… அதிருப்தியை வெளியிட்ட சுமந்திரன்!

0
821

ரணில் விக்கிரமசிங்கவை (Ranil Wickremesinghe) பிரதமராக நியமித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் (Gotabaya Rajapaksa) தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் (M.A.Sumanthiran) அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இந்த தகவலை நாளிதல் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே எம்.ஏ.சுமந்திரன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கோட்டாபய முற்றாக சட்டபூர்வமான தன்மையை இழந்துவிட்டார், மக்கள் அவர் வீட்டிற்கு செல்ல விரும்புகின்றனர். ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லா தீர்மானப் பிரேரணைக்கு எதிராக நாடாளுமன்றம் விரைவில் முடிவை காண்பிக்கும்.

ரணில் விக்கிரமசிங்கவின் தெரிவில், ஆரம்பத்திலிருந்தே தற்போதைய நாடாளுமன்றத்தில் சட்டபூர்வத்தன்மை இல்லை. அவர் தனது தொகுதியில் கூட இம்முறை வெற்றி பெறவில்லை என்றார்.